|
||||||||
ஒரு மாநிலத்தின் கவர்னரின் வேலை என்ன |
||||||||
1. மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பது. அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பது. 2. மாநிலத் தலைமை வழக்கறிஞரை நியமித்தல். 3. சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட, ஒத்திவைக்க, கலைக்க அதிகாரமுண்டு. 4. நிதிமசோதாக்களை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க ஆளுநரின் பரிந்துரை அவசியம் 5. சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை ஏற்கலாம், நிறுத்திவைக்கலா, குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். 6. மாநில சட்டமன்றக் கூட்டம் நடக்காத சமயத்தில், மாநிலத்தின் நிலைமை சரியில்லை எனக் கருதினால், ஆர்டினன்ஸ் என்கிற உரிமைக் கட்டளைகளைக் கொடுக்கலாம். 7. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனையை மாற்ற, தண்டனைக் காலத்தைக் குறைக்க, தண்டனையை ரத்து செய்ய அதிகாரம் உண்டு.
குறிப்பு:ஆளுநரில் அதிகாரங்கள் எல்லாம் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி முதலமைச்சரையும் சட்டமன்றத்தையும் பொறுத்தே செயல்வடிவம் பெறும். |
||||||||
by Swathi on 23 May 2014 0 Comments | ||||||||
Tags: Governor Role Governor Role India India Governor State Governor State Governor Role மாநில கவர்னர் கவர்னர் பணிகள் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|