|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா |
||||||||
பெயர்: ஸ்ரீதர் நாராயணன் பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா வசிப்பிடம்: ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா, வடஅமெரிக்கா பணி: மென்பொருள் பொறியியல் வல்லுனர் மின்னஞ்சல்: vnsridhar@gmail.com இணையதளம்: http://www.sridharblogs.com
மகாகவி பாரதியின் உறவினரான ஸ்ரீதர் நாராயணன் பெரும் நூலகச் சூழலில் வளர்ந்ததால் இயல்பாகவே புனைவு இலக்கியம் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டிருந்தார். 2007-ஆம் ஆண்டு ‘ரசவாதம்’ எனும் பரிசு பெற்ற அறிவியல் புனைவோடு எழுத்துலகில் நுழைந்த ஸ்ரீதரின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.
மற்றவை எழுத்துலகில் தொடர்ச்சியாக பயணிக்கும் இவருடைய ‘ரசவாதம்’, சிறுகதைப் போட்டி நடுவர் ஜெயமோகனால் முதல் மூன்று கதைகளில் ஒன்றாகத் தேர்வானது. ‘புதிய வகை எழுத்து’ என்றும் அவரால் பாராட்டுப் பெற்றது. புதுமைப்பித்தன், அசோகமித்திரன், அம்பை, தி. ஜானகிராமன், சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், இரா முருகன் என இவருடைய விருப்ப எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டது. குறிப்பாக அசோகமித்திரன் மீது பெரு மதிப்பு கொண்டவர். பழந்தமிழ் இலக்கியங்களையும் மரபுக் கவிதைகளிலும் பெரும் ஈர்ப்பு கொண்டது போலவே, பாரதி, ஆத்மாநாம், பிரமீள், முகுந்த் நாகராஜன் போன்றோரின் நவீன கவிதைகள் மீதும் ஈர்ப்பு கொண்டவர். படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களை காட்சிப்படுத்துவதில் நம்பிக்கைக் கொண்டவர்.
|
||||||||
by Swathi on 10 Mar 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|