|
|||||
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார் |
|||||
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் இன்று சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 86.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில், செய்தி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் பூவராகவன்.
இன்று அதிகாலை அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம் ஆகும்.
1962ம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூவராகவன், காமராஜர் அமைச்சரவையில் அமைச்சரானார். 1
967ம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்தார். பின்னர் கடலூர், மேட்டூர் எம். பி தொகுதிகளில் போட்டியிட்டு 2 முறை எம்.பியாகவும் செயல்பட்டுள்ளார்.
மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்த பூவராகவன் இன்று மரணமடைந்தார்.
1967 தேர்தலில் முதலமைச்சர் பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் தோல்வியடைந்தனர். அப்போது வெற்றிபெற்ற ஒரே காங்கிரஸ் அமைச்சர் விருத்தாசலத்தில் போட்டியிட்ட பூவராகன்.
1971 தேர்தலில் மேட்டூர் மக்களவைத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றவர்.
பூவராகவன் உடலுக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சரும், பூவராகவனின் நண்பருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் அஞ்சலி செலுத்தினார். |
|||||
by Swathi on 23 Feb 2014 0 Comments | |||||
Tags: பூவராகவன் காங்கிரஸ் பூவராகவன் Povaragavan Congress Minister Povaragavan Povaragavan Death | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|