ஜோதிட இமயம் அபிராமி சேகர் எம். ஏ (99948 11158) மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி இந்த வாரம் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். வீட்டில் சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். விரைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாகப் பணத்தைச் சேமிக்க முற்படுவீர்கள் . பரணி இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். கார்த்திகை 1 ஆம் பாதம் இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் எனப் பொழுது இனிமையாகக் கழியும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும் அரிய சாதனைகளைப் புரிவீர்கள். சிலரின் உடல் நலிவுறும்..
ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்) கார்த்திகை 2,3,4 பாதங்கள் இந்த வாரம் பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபடுவதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயங்காண்பர். சிலருக்கு பணிநிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். ரோகிணி இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் வீட்டில் அமைதி நிலவும். பிறமொழி பேசும் பெண்களின் நட்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதப்படலாம். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடக்கும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றங்காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.
மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்) மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவர். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். திருவாதிரை இந்த வாரம் உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும். பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். பிற்கால நலன்கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதுவாகன யோகம் ஏற்படும். புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றலென வீசும். மணமேடையேறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக இலாபமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.
கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) புனர்பூசம் – 4 ஆம் பாதம் இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.. பூசம் இந்த வாரம் காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். சினத்தை அடக்கி உடன் பிறப்புக்களுடன் ஒத்துச் செல்வது நல்லது. இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். ஆயில்யம் இந்த வாரம் நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும் ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.
சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்) மகம் இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். பூரம் இந்த வாரம் பதவி உயர்வுகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பெண்களின் அறிவுத்திறன் கூடும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரிபவர்களுக்கு வங்கிக் கடனுதவிகள் கிடைத்துத் தொழில் சிறக்கும். உத்திரம்- 1 பாதம் இந்த வாரம் பதவி உயர்வுகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பெண்களின் அறிவுத்திறன் கூடும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரிபவர்களுக்கு வங்கிக் கடனுதவிகள் கிடைத்துத் தொழில் சிறக்கும்.
கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்) உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் இந்த வாரம் தந்தைவழி உறவுகள் உதவி செய்வார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தர்ம காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். ஹஸ்தம் இந்த வாரம் நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத்தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சித்திரை – 1,2 பாதங்கள் இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.
துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்) சித்திரை-3,4 பாதங்கள் இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். சுவாதி இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு ஓரளவே பணவரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். விசாகம்- 1,2,3 பாதங்கள் இந்த வாரம் ஆரவாரம் மிக்க வாரம். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.
விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் ) விசாகம்- 4 ஆம் பாதம் இந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அனுஷம் இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும்.. கேட்டை இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகளில் எழலாம். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும்.
தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்) மூலம் இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். பூராடம் இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகி ழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். உத்திராடம் –1 ஆம் பாதம் இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.
மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள்) உத்திராடம்- 2,3,4- பாதங்கள் இந்த வாரம் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். திருவோணம் இந்த வாரம் உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 பாதங்கள் இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்) அவிட்டம் – 3,4 பாதங்கள் இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். சதயம் இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பூரட்டாதி-1,2,3 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.
மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்) பூரட்டாதி – 4 ஆம் பாதம் இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். உத்திரட்டாதி இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். ரேவதி இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச்செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
|