ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ (99948 11158)
மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, ஞானம் பெறுவீர்கள். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். உடன்பிறப்புக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பரணி இந்த வாரம் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பயணங்களில் முன்பதிவுப் பிரச்சனைகள், வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் என அவதிப்பட நேரலாம். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வருமானம் குறையும் நிலை ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். கார்த்திகை 1 ஆம் பாதம் இந்த வாரம் புதுமுயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பணவிஷயமான சிந்தனைகள் அதிகம் இருக்கும். சிலருக்கு மகான்களின் சந்திப்பால் மனம் மகிழும். நேர்த்தியாக உடையணிந்து, விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும்.
ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் ) கார்த்திகை 2,3,4 பாதங்கள் இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். ரோகிணி இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு மனதில் இன்பம் பொங்கும்.. பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும்.புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடைவீர்கள். தந்தைவழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். இடைவிடாத பணியின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் இந்த வாரம் தொழில் வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபத்தின் சதவிகிதம் அதிகரிக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதின் காரணமாகப் பணவரவுகளில் தாமதம் ஏற்படும். சிலருக்கு மேல்மட்டத்திலுள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதனால், கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். சிலருக்குப் கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும் பெறலாம்.
மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்) மிருகசிரீடம்- 3,4 பாதங்கள் இந்த வாரம் மனதிற்கு இனிய மணமகள்/மணமகன் கிடைத்து திருமண ஆசைகள் நிறைவேறும். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். இக்கட்டான சூழ்நிலைகளில் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும். திருவாதிரை இந்த வாரம் எதிர்பாராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியும் இருக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளுடன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித்தனம் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் இந்த வாரம் திருப்திகரமான பணவரவால் பொருளாதார நிலை மேம்படும். உறவுகளுடனான உல்லாசப் பொழுதுபோக்குகளால் மனதில் சந்தோஷம் நிலவும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெற்று பரிசையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக இலாபம் அதிகரித்து தாராளமான பணவரவு இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) புனர்பூசம் – 4 ஆம் பாதம் இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தீயவர்களை விட்டு விலகுவது உத்தமம். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பூசம் இந்த வாரம் வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனம் ஆகியவற்றால் மனம் அமைதி பெறும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயில்யம் இந்த வாரம் முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு, டி.வி ஆகியவற்றால் ஏற்படும், மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்.,
சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்) மகம் இந்த வாரம் தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். பூரம் இந்த வாரம் உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா என செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கலாம். உத்திரம்- 1 பாதம் இந்த வாரத் நினைத்தபடி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். உயர்அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல பாராட்டும் பெறுவீர்கள்.
கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்) உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் இந்த வாரம் துவக்கத்தில் கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்து ஜன வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். ஈடுபடும் புதிய வியாபார முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். ஸ்த்ரீ சுகம், பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். தெய்வ தரிசனத்தால் மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். ஹஸ்தம் இந்த வாரம் மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். திட்டமிடப்பட்ட பயணங்களில் முன்பதிவு கிடைக்காமல் தடைகள் ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். சித்திரை – 1,2 பாதங்கள் இந்த வாரம் குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். .சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பார்கள் புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் கடன் உதவிகள் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்) சித்திரை-3,4 பாதங்கள் இந்த வாரம் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். சுவாதி இந்த வாரம் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விசாகம்- 1,2,3 பாதங்கள் இந்த வாரம் பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் முன்னேற்றங்கள் தேடிவரும்..
விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் ) விசாகம்- 4 ஆம் பாதம் இந்த வாரம் வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும் பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். அனுஷம் இந்த வாரம் உங்கள் அனைத்துப் பணிகளிலும் மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். கேட்டை இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்) மூலம் இந்த வாரம் அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். நீண்டநாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக இலாபங்களை அடைவீர்கள். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும். பூராடம் இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தங்கள் தனித் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்துவது நல்லது. பதறாத காரியம் சிதறாது முடியும் என்பதால், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமின்றிப் பொறுமையாகச் செய்தால் வெற்றி நிச்சியம். பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணத்தால் லாபம் அதிகரிக்கும். உத்திராடம் –1 ஆம் பாதம் இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிவுடன் நடக்கும் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.
மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் ) உத்திராடம்- 2,3,4- பாதங்கள் இந்த வாரம் கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். உயரக வாகன வசதி அமையும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேகசுகம் குறையும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். திருவோணம் இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். இல்லத்தில் அமைதி நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். அவிட்டம் 1,2 பாதங்கள் இந்த வாரம் உயர் வாகன வசதிகள் மேம்படும். உதவிகரமான புதிய, நல்ல நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் வேலையில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்குத் தக்க ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.
கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்) அவிட்டம் – 3,4 பாதங்கள் இந்த வாரம் ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மதிப்பு, கௌரவம் உயரும். சதயம் இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள்.. நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். பூரட்டாதி-1,2,3 பாதங்கள் இந்த வாரம் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அரசு உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும்..
மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்) பூரட்டாதி – 4 ஆம் பாதம் இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். உத்திரட்டாதி இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். தொழிலில் முழு வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். ரேவதி இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள்.
|