|
||||||||
பலவருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமானச்சேவையை ஆரம்பித்த நிறுவனம். |
||||||||
பல வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமானச்சேவையை ஆரம்பித்த Cathay Pacific விமானச் சேவை நிறுவனம் கடந்த 1/02/2024 முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உலகில் சுமார் 80 இடங்களுக்குச் சேவையாற்றும் ஒரு விமானச் சேவை நிறுவனமாகும்.
உற்சாக வரவேற்பு 253 பயணிகளுடன் வந்திறங்கிய விமானத்திற்கு, விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமானச்சேவை ஏர்பஸ் 330-300 விமானத்தைப் பயன்படுத்தி பயணிகள் விமானச் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வாரத்தில் மூன்று நாட்கள் சேவை அவர்களின் புதிய விமான அட்டவணையின்படி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி உட்பட வாரத்தில் 3 நாட்கள் விமானச் சேவைகள் மேற்கொள்ளப்படும். மீண்டும் விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்டது இலங்கையின் சுற்றுலாத் துறைக்குப் பங்களிக்கும் முக்கிய விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. |
||||||||
by Kumar on 07 Feb 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|