|
||||||
கடுக்காயின் மருத்துவ குணங்கள் !! |
||||||
நாட்டு மருந்துகளில் ஒரு மிகச்சிறந்த மருந்து, கடுக்காய். கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. கடுக்காயின் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாதத்தில் துளிர் விடும். இந்த மரத்தின் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும். நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது. விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன. மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன. புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைத்தாலும், அது கெடவே கெடாது. சித்தர்கள் பாடல்களில் கடுக்காய்: "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.' காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்து. கடுக்காயின் மகத்துவங்கள் : பக்கவிளைவுகளை குறைக்க : கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்திற்கு பெயர் திரிபலா. இந்த மருந்தை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துக்கள் நிறைய உட்கொண்டதால் ஏற்படும், பக்க விளைவுகளைக் குறைக்க இந்த மருந்து உதவுகிறது. உடல் வலிமை பெற : நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை - இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும். பல் நோய்கள் தீர : கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும். மூல எரிச்சல் தீர : கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும். ஜீரண சக்தி அதிகரிக்க : மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும். இருமல் குணமாக : கடுக்காய்த் தோல், திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2 கி. தூளை தேனில் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். வாதம், பித்தம் குணமாக : கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும். தலைவலி குணமாக : வேப்பம்பட்டை , கடுக்காய் (கொட்டை நீக்கியது), கோரைக்கிழங்கு, நிலவேம்பு சம எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லீ. நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒரு நாளைக்கு 3 வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும். உடல் எடையைக் குறைக்க : கடுக்காய்த் தோல், தான்றித்தோல், நெல்லி வற்றல் சம எடை எடுத்து சுத்தம் செய்து இடித்து வஸ்திரகாயஞ் செய்து அதில் 1/2 தே. கரண்டி அளவு கொள்ளுக் குடிநீருடன் காலை, மாலை என இருவேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா) கடுக்காய்த் தோலை சூரணித்து 1/2 தே.கரண்டி காலை, மாலை பாலுடன் உட்கொண்டு அச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில் பூசி ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும். இளநரை மறைய : பிஞ்சு கடுக்காய், நெல்லிக்காய், கருவேப்பிலை... மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்கு குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாகத் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த `கடுக்காய் தைலக் குளியலை' கட்டாயம் செய்து பாருங்கள், இளநரை ஓடியே போவதுடன், முடியும் கறுமையாக மாறிவிடும். |
||||||
by Swathi on 12 Sep 2014 62 Comments | ||||||
Tags: Terminalia chebula Kadukkai கடுக்காய் | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|