சமீபத்தில் அட்லி - விஜய் கூட்டணியில் வெளிவந்த தெறி படம் மெகா ஹிட் பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பதற்கான, முயற்சியில் களம் இறங்கியுள்ளதாம் படக்குழு.
இந்நிலையில் தெறி படத்தை சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாகவும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
|