|
|||||
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா |
|||||
தேவையானவை சர்க்கரைவள்ளி கிழங்கு -- அரை கிலோ துருவிய வெல்லம் -- 2 கப் கேசரி பவுடர் -- சிறிதளவு நெய் -- தேவைக்கு ஏலக்காய் தூள் -- கால் டீஸ்பூன் செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை கொட்டி கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய், கேசரி பவுடர், ஏலக்காய் தூள் , சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். ருசியான அல்வா தயார். |
|||||
by Thiru pathy on 16 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|