LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    இந்திய சுற்றுலா Print Friendly and PDF

மூணாறில் வரலாறு காணாத வெப்பம்.

மூணாறில் கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா வந்த பயணிகள் தவிக்கின்றனர்.

 

தென்னகத்து காஷ்மீர் எனப்படும் மூணாற்றில் ஆண்டு முழுவதும் நிலவும் மாறுபட்ட காலநிலையை அனுபவிக்கச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதுண்டு. அதுபோன்று தற்போது கோடையிலிருந்து விடுபடக் குளுமையைத் தேடி வந்த பயணிகள் வழக்கமான காலநிலை இன்றி பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பகுதியில் நிலவும் வெப்பத்தால் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

 

மூணாறில் கோடைக் காலங்களில் குறைந்தபட்ச வெப்பம் 10 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பம் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால் இந்தாண்டு கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்தது. குறைந்தபட்ச வெப்பம் 11 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.

 

ஏப்.28, 29 ல் 29 டிகிரியாக இருந்த வெப்பம் ஏப்.30ல் 30 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களாக 28 டிகிரி செல்சியஸ் இருந்தது. இதற்கு முன் அதிகபட்சமாகக் கடந்த 2021 மார்ச் 9ல் வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் நிலவியது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இங்குக் கோடை மழை குறைந்தது. கடந்தாண்டு ஜன. 1 முதல் ஏப்.30 வரை 35.47 செ.மீ., மழைப் பதிவான நிலையில் இந்தாண்டு அதே கால அளவில் 15.52 செ.மீ., மழை பெய்தது. இது கடந்தாண்டை விட 20.18 செ.மீ., குறைவாகும்

by Kumar   on 05 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலக அதிசயம் தாஜ் மஹால் ! உலக அதிசயம் தாஜ் மஹால் !
இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்! இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்!
இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..! இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..!
இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள்
இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்... இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.