ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம்.ஏ. (99948 11158)
மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி இந்த வாரம் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனக் கவலைகளை மனைவியின் அரவணைப்பு குறைக்கும். தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். பரணி இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு எந்தவொரு காரியத்தைக் கையில் எடுத்தாலும் தடைகள் ஏற்படும். சுலபமான செயல்களையும் கூட கடின உழைப்புக்குப் பிறகே நிறைவேற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு சிரமங்கள் ஓரளவுக்குக் குறையும். கார்த்திகை 1 ஆம் பாதம் இந்த வாரம் கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.. விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் ) கார்த்திகை 2,3,4 பாதங்கள் இந்த வாரம் மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். புனித காரியங்களில் ஈடுபடுவர். அரசாங்க உத்தியோகம் கிடைக்கலாம். நண்பர்கள் உதவுவர். கிராமாதிகாரம், அரச பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். சிலருக்குத் தந்தைவழி உறவுகளால் சங்கடங்களும், தொல்லைகளும் ஏற்படும். ரோகிணி இந்த வாரம் இனிய வாரம். பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாச சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும். மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு எப்போதும் பணம் பற்றிய சிந்தனையாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என இந்த வாரம் தெய்வீக வாரமாக அமையும். உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளாலும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி, தொழி எனப் பெண்களால் இலாபம் உண்டு.
மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்) மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் இந்த வாரம் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் பணிந்து நடப்பதும் பணியில் முன்னேற்றங்களைத் தரும். எல்லாக் காரியங்களுமே சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் தவறாது, தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரை இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. கற்பனை வளம் பெருகும். புத்தக வெளியீடு மற்றும் எழுதுதல் துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். சம்பாதித்த பணத்தை சேமிக்க முற்படுவீர்கள். புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் இந்த வாரம் அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாறலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) புனர்பூசம் – 4 ஆம் பாதம் இந்த வாரம் உங்களுக்கு வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். தந்தை வர்க்கத்தினரால் தொல்லை இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வியாபரிகளே, வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீரகள். பூசம் இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு. ஆயில்யம் இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய நவீனமான வாகன யோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்பட்டு. அதன் மூலமாக அளவிட முடியாத ஆதாயங்கள் கிடைக்கும். .
சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்) மகம் இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் ஏற்பட்டு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறும். தொழில் மூலமான பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்குவன்மை, வாகனயோகம் உண்டு. சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். பூரம் இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புத்தாடைகள் சேரும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தலைமைப் பதவிகள் தேடிவரும். தங்கள் சேவைகள் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். பணிபுரியும் பெண்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. உத்திரம்- 1 பாதம் இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள்.. சுகமும் ஆரோக்கியமும் பெருகும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.
கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்) உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் இந்த வாரம் உங்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். தங்களின் சிறப்பான பணிக்காக அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தோடு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். ஹஸ்தம் இந்த வாரம் திருமணம், மக்கட்பேறு ஆகியவை ஏற்படலாம். கார், ஸ்கூட்டர் போன்ற உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளைச் செய்து முடிப்பர். தனது இராஜதந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகளை அடைவார். புண்ணிய காரியங்கள், தானதர்மங்கள் செய்யும் பாக்கியம் ஏற்படும். வளம் கொழிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும். திடீர்ப் பயணங்கள் ஏற்படலாம். புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். சித்திரை – 1,2 பாதங்கள் இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும்.
துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்) சித்திரை-3,4 பாதங்கள் இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவே இருக்காது. புண்ணியத் தல யாத்திரைகள் சென்று புண்ணியம் தேடி வருவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். பலவழிகளில் மற்றும் வாக்கு வன்மையாலும் பணவரவு கூடும். அந்தஸ்து உயரும். கணக்கு வேலைகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்குத் தனலாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும். தீயோர் தொடர்பால் சஞ்சலம் ஏற்படும். சுவாதி இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனதுக்குப் பிடித்தபடி மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். விசாகம்- 1,2,3 பாதங்கள் இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். வளர்பிறை போல் நாளுக்கு நாள் சந்தோஷமும், செல்வமும் பெருகும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் ) விசாகம்- 4 ஆம் பாதம் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பலவழிகளிலும் பணம் சேரும். சிலருக்கு உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். சுற்று வட்டாரத்தில் பிரபலமாகி தங்கள் மதிப்பு, கௌரவம் உயரும். அனுஷம் இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகள் உங்கள் மீது கருணை செலுத்துவாள். தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். சிலருக்குத் திருமணமாதல், மக்கட் பேறு, பால்வளம் ஆகியவை ஏற்படும், தங்கள் வேலை அங்கீகரிக்கப்பட்டு, தகுந்த பரிசுகளும் கிடைக்கும். ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் நிலை ஏற்படும். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். கேட்டை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். ஓய்வெடுக்கும் விதமாக, எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும். கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்) மூலம் இந்த வாரம் நீங்கள் பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பைத் தவிர்க்கும். திருமண வயது வந்து, திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். பூராடம் இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். ஆயினும், தங்களுக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். உத்திராடம் –1 ஆம் பாதம் இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பல பொருட்களின் ஆதாயம், சந்தோஷம், நவீன வசதிகள் மற்றும் ஆபரணங்களில் முதலீடு செய்தல் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது.
மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் ) உத்திராடம்- 2,3,4- பாதங்கள் இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றங்கண்டும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். திருவோணம் இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 பாதங்கள் இந்த வாரம் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். மனைவி குணவதியாய் தங்கள் சொல் கேட்டு நடப்பாள். சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். வாசனாதி பரிமள திரவியங்கள் சேரும். தன் இனிய வாக்கால் அனைவரையும் கவர்வார். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் ( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்) அவிட்டம் – 3,4 பாதங்கள் இந்த வாரம் தாராளமான தனவரவு வரும். செல்வம் சேரும். பலவகைகளிலும் பேரும் புகழும் சேரும். சொன்னசொல் தவறாது நடப்பர். தைரியம் கூடும். உயர்ரக ஆடை ஆபரண வகைகள், போகப் பொருட்கள், பொழுதுபோக்கு உபகரணங்கள் யாவும் கிடைக்கும். பெரிய மகராஜன் போல் வாழும் வகை ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் நடக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். வேதம் அறிதல், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம், மிகுந்த உற்சாகம், சுகமான போஜனம் ஆகியவை கிடைக்கும். சதயம் இந்த வாரம் குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தனச்சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகை ஆதாயம் மற்றும் உதவிகளால் புதிதாகத் தொழில் தொடங்கும் நிலை ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது. பயண சுகம் ஏற்படும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். பூரட்டாதி-1,2,3 பாதங்கள் இந்த வாரம் முதல் பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். பங்குச்சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும். தொழிலில் உங்கள் கூட்டாளிகளின் கடின உழைப்பு மெச்சத் தக்கதாகவும், திருப்தி கரமாகவும் இருக்கும். மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.
மீனம் ( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்) பூரட்டாதி – 4 ஆம் பாதம் இந்த வாரம் அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மன மகிழ்ச்சி அடைவர்.. தெய்வப் பிரார்த்தனையால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். உத்திரட்டாதி இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி தரும் . வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில் நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். ரேவதி இந்த வாரம் தனவரவு அதிகமாவதால் தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மாணவர்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொள்வர். நீண்ட காலமாக வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். மனைவியுடன் ஏற்படும் கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கவும். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். தீய நட்பைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
|