ஜோதிட இமயம் அபிராமி சேகர் . M. A., Cell – 99948 11158
மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனக் கவலைகளை மனைவியின் அரவணைப்பு குறைக்கும். தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதில் நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள், பயணங்கள் ஏற்படும். பரணி இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வீட்டில் நிம்மதி குறையும் ஆதலால், பொறுமையைக் கடைப்பிடிக்க ஆலோசனை வழங்கப்படுகிறது. கார்த்திகை 1 ஆம் பாதம் இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் முழுமையான ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். மனங்கவர்ந்த அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். வியாபாரிகள் இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். கல்வியில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். உற்ற நேரத்தில் உறவுகள் கைகொடுப்பர்.
ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் ) கார்த்திகை 2,3,4 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சில நண்பர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். கல்வியாளர்களுக்குச் சிறந்த வாரம் ஆகும். ரோகிணி இந்த வாரம் இனிய வாரம். எல்லாக் காரியங்களுமே சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் தவறாது, கிடைத்து, அதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். பேரின்பம் ஏற்படும். உங்கள் புகழ் ஓங்கி, மாபெரும் சபைகளில் மாலைகள் விழும். தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு எப்போதும் பணம் பற்றிய சிந்தனையாகவே இருக்கும். உங்கள் தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என இந்த வாரம் தெய்வீக வாரமாக அமையும். தான தருமங்கள் செய்து மகிழ்வீர்கள்.உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் இருக்கும். உறவினர் வருகையும், விருந்தால் மகிழ்ச்சியும் ஏற்படும்.
மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்) மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. புத்தக வெளியீடு மற்றும் எழுதுதல் துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சமயம் பார்த்துத் தங்களுக்கு தேவையான வேலைகளை சாதித்துக் கொள்ளலாம். சிலருக்குத் தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படலாம். திருவாதிரை இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத் திறனும் கூடும். சிலர் பண விஷயங்களில் நண்பர்களிடமே ஏமாற நேரலாம். எச்சரிக்கை தேவை. தோழர்களில் நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் எழலாம். அரசுப் பணியாளர்களுக்கு தங்கள் விருப்ப்ப்படி, புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கி, வருமானமும் பெருகும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.
கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) புனர்பூசம் – 4 ஆம் பாதம் இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனக் குறைவு காரணமாக மதிப்பெண்கள் குறையலாம். எனவே, விளையாட்டுத் தனங்களை விட்டு விவேகத்துடன் நடப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்துவரை அக்கறை கொள்ளுங்கள். பூசம் இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. அரசு உதவியுடன் தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும. ஆயில்யம் இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும் வாரம். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறும். பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்குவன்மை, வாகனயோகம் உண்டு. சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்பட்டுத் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும்.
சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்) மகம் இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குத் தலைமைப் பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். அரசு உதவியுடன், வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்தாடைகள் சேரும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். பூரம் இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான மற்றும் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள். சுகமும் ஆரோக்கியமும் பெருகும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். உத்திரம்- 1 பாதம் இந்த வாரம் உங்களுக்குப் பணவரவு பல வழிகளிலும் அதிகரிக்கும். அரசு மரியாதை கிட்டும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். மனைவி அனுகூலமாக நடந்துகொள்வார். தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்.
கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்) உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் இந்த வாரம் பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். அரசு மரியாதையும், புகழும் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்தபடி உயர் பதவிகள் கிடைக்கும். உயர் ரக வாகனங்களும், வசதி வாய்ப்பும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிகப்பாக நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்கும் காலம் கனிந்து வரும். எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். ஹஸ்தம் இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். தரும சிந்தனையும், ஆன்மீக ஈடுபாடும் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். தொழில் முதலீட்டுக்கான வங்கிக் கடன்கள் தாமதமின்றிக் கிடைக்கும். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். திடீர்ப் பயணங்கள் ஏற்படலாம். சித்திரை – 1,2 பாதங்கள் இந்த வாரம் பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். சிலருக்கு பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். செல்வாக்குள்ள மனிதர்களின் நட்பும், அன்பும், ஆதரவும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.
துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்) சித்திரை-3,4 பாதங்கள் இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவேயில்லை. புதிய விரிவாக்கத் திட்டங்களால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் நன்மை ஏற்படும். மனதில் அமைதியும், வசதி வாய்ப்புகளும் பெருகும். சுவாதி இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். இனிய பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு ஏற்பட்டு பொருளாதார நிலை சீராகவே இருக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். விசாகம்- 1,2,3 பாதங்கள் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பொன் பொருள் ஆடை ஆபரணங்களுக்குக் குறைவிருக்காது. நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். தெய்வ பக்தி கூடி மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சுகாதாரமற்ற கையேந்தி பவன்களில் உணவருந்தாது இருப்பது நல்ஆரோக்கியம் தரும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வசதியான குடும்பம் பெண் மனைவியாக அமைந்து வாழ்க்க்கையும் இனிக்கும். குடும்பத்தோடு இனிய சுற்ற்றுலாக்கள் சென்று மகிழ்வீர்கள்.
விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் ) விசாகம்- 4 ஆம் பாதம் இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். அதன் காரணமாக சிலருக்கு பணச் செலவுகள் கூடும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். சமூகத்தில் மதிப்பு, கௌரவம் உயரும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களை அனுசரித்துச் செல்வது சிரமனான காரியமாய் இருக்கும். அனுஷம் இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகள் உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழமாட்டீர்களா ? தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு, வியாபாரிகளுக்கு அரசுக் கடனுதவிகள் சுலபமாக்க் கிடைக்கும். தொழிலில் எப்பொதும் போல் இலாபமும் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். பெண்கள் புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். கேட்டை இந்த வாரம் தேவையற்ற செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும். ஆயினும், வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் வழக்கத்தை விட அதிக நேரத்தை அக்கறையுடன் படிப்புக்காக ஒதுக்கினால் அதிக மதிப்பெண் பெறலாம்.
தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்) மூலம் இந்த வாரம் திருமண வயது வந்து, திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்குத் தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருந்தால் பண இழப்பைத் தவிர்க்கலாம். மகிழ்ச்சி நிறைந்த, அமைதியான வாழ்க்கை அமைய தியானம், யோக ஆகியவற்றை பயிற்சி செய்வது நல்லது. பூராடம் இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெளிநாட்டுப் பயணத்தால் இலாபம் கிடைக்கும். ஆயினும், சிலருக்குக் காரியத் தடைகளும், வழக்கு வியாஜ்ஜியங்களும் ஏற்படலாம். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வீண் ஆசைகளை விலக்கி வைப்பது நல்லது. பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். கூட்டு வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறு தொழில் செய்வோருக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். உத்திராடம் –1 ஆம் பாதம் இந்த வாரம் செயல்திறன் அதிகரிக்கும். சுறுசுறுப்பான உங்கள் செயல்பாடுகளால் உடலில் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும், வாய்ப்பு ஏற்படும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும்.
மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் ) உத்திராடம்- 2,3,4- பாதங்கள் இந்த வாரம் உங்கள் கடின உழைப்பின் காரணமாக சம்பாதிக்கும் திறன் மேம்படும். பல திசைகளில் இருந்தும் போதிய அளவு பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பருவ மாற்றங்கள் காரணமாக வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது. உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். திருவோணம் இந்த வாரம் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பு உங்களை குன்றிலிட்ட விளக்காக உயர்த்தும். அவிட்டம் 1,2 பாதங்கள் இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். அரசுப் பணியாளர்களுக்கு ஏற்படும் அனுகூலமான காரியங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும்.
கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்) அவிட்டம் – 3,4 பாதங்கள் இந்த வாரம் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. மன விருப்பத்திற்கு ஏற்ப வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். சதயம் இந்த வாரம் தாராளமான தனவரவு இருக்கும். பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம ஏற்படும். புத்தாடை இலாபம், சுகமான போஜனம் ஆகியவை கிடைக்கும். புத்திர பாக்கியம், புத்திரரால் உதவி ஆகியவை ஏற்படும். கோபத்தை அடக்கினால் குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும். சிலருக்குக் குடும்பத்தாருடன் ஏற்படும் குழப்பங்களால் மன அமைதி குறையும். பூரட்டாதி-1,2,3 பாதங்கள் இந்த வாரம் போதுமான அளவு தனச் சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகை ஆதாயம் மற்றும் உதவிகளால் புதிதாகத் தொழில் தொடங்கும் நிலை ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்குப் பணிகளைப் பொருத்தவரை நல்ல முன்னேற்றமான காலமாக இருக்கும். குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது.
மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்) பூரட்டாதி – 4 ஆம் பாதம் இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். பங்குச்சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். பயண சுகம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். உத்திரட்டாதி இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். மற்றவர்களுக்கும் சிறப்பான வாரமே. அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். தொழில்த் துறையினருக்கு முன்னேற்றமான காலமாகும். ரேவதி இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி தரும் வாரம். வழக்கு விவகாரங்கள் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தான தருமங்கள் செய்து மகிழ்வீர்கள். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். புதிய வியாபார விரிவாக்கத் திட்டங்கள் ஆதாயம் தரும்.
|