LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வரலாறு - Tamizh History Print Friendly and PDF

விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு.

விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் கண்டறிந்தனர்.

 

இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியது: ''சோழ மன்னன் சுந்தர சோழனின் மகனும் புகழ்பெற்ற சோழ மன்னன் ராஜராஜனின் மகனுமான ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு சொருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. 

 

எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கொப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான்.

சுந்தர சோழன் தன் மகன் ஆதித்த கரிகாலனுக்குத் தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறான். எனவே தான் இப்பகுதியில் இவனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஏற்கெனவே பேரங்கியூர், திருமுண்டீஸ்வரம் போன்ற இடங்களில் கிடைத்திருக்கிறது. 

 

தற்போது மேலும் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

இக்கல்வெட்டு 'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்று தொடங்குகிறது இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 பொறிக்கப்பட்ட கல்வெட்டு திரு முனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூர் என்று இவ் ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது.

 

ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூர் மன்றாடி நிகரிலி மூர்த்தி சூரியன் சந்திரர் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை இக்கோயிலை நிர்வகித்த பன் மாகேஸ்வரர் வசம் ஒப்படைத்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றிலிருந்து ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது.

 

மேலும், இவன் சதியால் கொல்லப்பட்டான் என்பதை காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு குறிப்பிட்டதோடு அவர்களின் பெயர்ப் பட்டியலையும் தெளிவாகத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு தமிழகச் சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது'' என்றார்.

by Kumar   on 05 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல். தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்த என ஆய்வில் தகவல்.
4500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ஜல்லிக்கட்டு - தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பாறை ஓவியங்கள்! 4500 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் ஜல்லிக்கட்டு - தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் பாறை ஓவியங்கள்!
செய்யாறு அருகே 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு செய்யாறு அருகே 14-ம் நூற்றாண்டு சம்புவராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
குமரியில் கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலக் கல்வெட்டு! குமரியில் கிடைத்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலக் கல்வெட்டு!
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் -   தமிழ்-கொரிய தொடர்பு - 2 -  ஒரிசா பாலு ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் - தமிழ்-கொரிய தொடர்பு - 2 - ஒரிசா பாலு
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 1  -ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்-தமிழ்-கொரிய தொடர்பு - நாடு 1 நிகழ்வு 1 -ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன்
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம் ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.