பாபநாசம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது மலையாள சினிமாவில் ஹிட்டான சார்லி படமும் தமிழில் ரீமேக் ஆகப் போகிறது. இந்த படத்தை தமிழில் ப்ரமோத் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் விஜய் இயக்க, மாதவன் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் தேவி படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. தொடர்ந்து ஜெயம்ரவியின் படத்தை இயக்கவிருக்கிறார் அவர். இவ்விரண்டு படங்களையும் முடித்த பின்னர், நவம்பர் 15ம் தேதிக்கு மேல் சார்லி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருக்கிறார்கள். இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் மாதவனின் ரேட்டிங் எகிறிக்கிடக்கும் நிலையில், சார்லி படம் மாதவனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்கிறது கோடம்பாக்கம்.
|