|
|||||
உலக தண்ணீர் தினம் - மார்ச் 22 !! |
|||||
நீர் இன்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு.... நீரின்றி நம்மால் பூமியில் வாழ முடியாது என்பதே இதன் பொருளாகும்..... நாம் வாழும் பூமியானது சுமார் 70 விழுக்காடு நீர்பரப்பும், 30 விழுக்காடு நிலப்பரப்பும் கொண்டது. பூமியில் 70 விழுக்காடு பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 விழுக்காடு கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதம் உள்ள 2.5 விழுக்காடு அளவிற்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 விழுக்காடு நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. நமது பூமியில் நாளுக்கு நாள் நன்னீர் பரப்பு அதிகரிக்கிறதோ இல்லையோ ஆனால் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. அது மட்டும்மல்லாமல் சிலரின் சுய லாபத்திற்காக தொழிற்ச்சாலை கழிவுகள் நன்னீரில் கலக்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள் மக்களை தாக்குகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர் ஆதாரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? ஆறுகளிலும், குளங்களிலும் தொழிற்ச்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். அரசாங்கம் இலவசமாக டி.வி, மிக்சி போன்றவற்றை கொடுப்பதை நிறுத்தி விட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி தரவேண்டும். பொது குடிநீர் குழாய்களில் வீணாகும் நீரை, அருகில் ஒரு மரத்தையோ, செடியையோ வைத்து அதற்கு செல்லுமாறு வழிவகை செய்யவேண்டும். மரம் வளர்ப்பு, நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் !! உற்பத்தி செய்வதற்கு சமம் !! |
|||||
by Swathi on 02 Jan 2014 0 Comments | |||||
Tags: Water Day World Water Day Water Save Water தண்ணீர் தினம் தண்ணீர் சேமிப்பு உலக தண்ணீர் தினம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|