|
|||||
சர்வதேச காச நோய் தினம் - மார்ச் 24 |
|||||
உலக மக்கள் தொகையில் சுமார் 300 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்நோய் தாக்குதலினால் 50 லட்சம் பேர் இறந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நோயின் தன்மை உணர்ந்து சிகிச்சை பெறாதது தான். நகம், முடியைத் தவிர எல்லா இடத்திலும் டி.பி. கிருமி தாக்கும். ஆனால், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. காச நோய்க் கிருமியானது இருமல், தும்மல், சுவாசம், பேசுதல் மூலமாகப் பரவுகிறது. எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு நோயை விரைவாக குணப்படுத்த முடியும். காசநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. இது ஒரு தொற்றுநோய். இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றில் இருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது, மாலையில் காய்ச்சல், மூன்று வாரங்களுக்கு மேலாக இருமல், ரத்தம் வெளியேறுதல், எடை குறைவு, பசியின்மை, இரவில் வியர்த்தல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகள். முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான உணவு, நல்ல காற்றோட்ட வசதி, சுத்தமான இருப்பிடம் போன்றவற்றால் இந்த நோயை முற்றிலும் தடுக்கலாம் என சொல்கிறது மருத்துவ துறை. காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வரலாறு : மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. |
|||||
by Swathi on 02 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|