வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. முத்தரப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதின.டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.3 ஓவரில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 37.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. கெயில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
|