|
||||||||
வெயில் குறையும் |
||||||||
எந்த வருடம் இல்லாத வெயில் இந்த வருடம் பார்த்தாயா? எங்கும் மழை இல்லையே? என்ன காரணம் யோசித்தாயா?
ஊரில் மரங்கள் அழிந்ததும் குளங்கள் குப்பை கூளம் ஆனதும் !
மழை நீர் வடிகால் அடைத்ததும் தண்ணீர் வரத்து நின்றது
குளங்கள் வறட்சி ஆனதால் தேங்கும் தண்ணீர் இல்லாமல்
வானம் வறண்டு போனதே, வானம் வறண்டு போனதால்
வெயில் அதிகம் ஆனதே, நீங்கள் சிறுவர் ஆனாலும்
குப்பைகளை ஆறு குளங்களில் கொட்டாதீர்,
பெற்றோர் தவறு செய்தாலும் நீங்கள் எடுத்து சொல்லுங்கள்
சமயம் கிடைக்கும் போதெல்லாம் செடிகள் நட்டு வையுங்கள்
நீங்கள் வளரும் குழந்தைகள் அதுவும் வளரும் மரங்களாய் !
சுற்றி வர மரங்களாய் உங்கள் ஊர் இருந்தாலே, மழையும்
உங்கள் ஊர் தேடியே நித்தம் நித்தம் பெய்யுமே
வெயில் கூட குறையுமே ! |
||||||||
Sun hot less | ||||||||
by Dhamotharan.S on 16 May 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|