|
||||||||
தோட்டம் போடலாம் |
||||||||
தோட்டம் போடலாம்
சின்ன சின்ன பாத்திகள் கட்டி
தோட்டம் வளர்ப்போம் நம் வீட்டில்
பச்சை பச்சை காய்கறிகள்
தினமும் பறித்தே சமைத்திடலாம்
மிச்சம் இருக்கும் காய்கறிகள்
அருகில் வசிக்கும் நண்பர்க்கு
அன்பாய் கொடுத்து உதவிடலாம்
வீரிய உரங்கள் சேர்க்காமல்
இயற்கை உரங்களை சேர்த்து விட்டால்
இன்னும் சிறப்பாய் பயிர் விளையும்.
இப்படி விளையும் காய்கறியால்
வீட்டு செலவை சேமிக்கலாம்
பெற்றோரிடமும் நன் பெயர் வாங்கிடலாம்.
இன்றே இதனை தொடங்கிடுவீர்
அன்பு குட்டி செல்வங்களே ! |
||||||||
Create garden | ||||||||
by Dhamotharan.S on 17 Jul 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|