|
||||||||
காட்டுக்குள் சூரிய கதிர்கள் |
||||||||
அந்த அடர்ந்த காட்டுக்குள் கொத்து கொத்தாய் பூத்திருக்கு, கொன்றை பூக்கள் மரத்தினிலே.! பச்சை பசேல் என விரிந்திருக்கு, செடிகளும் கொடிகளும் காட்டினிலே ! வானத்தை தொட்டு வளர்ந்திருக்கு காட்டுக்குள் இருக்கும் மரங்களுமே ! கூ..கூ..கீ..கீ..கீச்..கீச். இசையுடனே, பறவைகள் சுற்றி பறக்குதுவே உர்..உர்..உர்..உறுமலுடன், மரங்களில் குரங்குகள் ஆடுது பார் அரவம் கேட்டு பாம்பு ஒன்று, சர சரவென மறையுது பார். மரங்களின் கிளைகளின் இடைவெயில், சூரிய கதிர்களின் விழுகிறதே தொலைவில் இருந்து பார்ப்பதற்கு, பச்சை இருளின் கூடத்துள் ஒளியின் பாதைகள் கோடுகளாய் தெரிகிறதே..! |
||||||||
Sun lights | ||||||||
by Dhamotharan.S on 10 Aug 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|