|
||||||||
பழங்களை பார் |
||||||||
பாப்பா இங்குள்ள பழங்களை பார் பல பல நிறத்தில் பழங்களுண்டு
மஞ்சள் நிறத்தில் வாழை பழங்கள்
சிவப்பிலும் இருக்குது வாழை பழங்கள்
அதனுக்கு “செவ்வாழை” என்ற பெயருண்டு
சிவப்பும் மஞ்சளும் கலந்த பப்பாளி
இதை உண்பதில் மிகவும் சுவையுண்டு
சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம்
இது மாம்பழத்தின் கனிந்த நிறம்
பச்சையும் மஞ்சளும் கலந்த நிறம்
இது கொய்யா பழத்தின் கனிந்த நிறம்
பச்சை நிறத்தில் முள்ளாய் நிறைந்த பழம்
உருவத்தில் பெருத்த பலாவின் நிறம்
மஞ்சளில் முள்ளாய் நிறைந்த பழம்
அன்னாசி என்று பெயருண்டு
அறுத்து சாப்பிட சுவையுண்டு
இரத்த சிவப்பாய் இறுகிய தோலாய்
இருக்கும் பழத்திற்கு “மாதுளை” பெயருண்டு
உள்ளுக்குள் இருக்கும் முத்துக்கள்
உடலுக்கு இரத்த்த்தை சேர்த்திடுமே !
பொதுவாய் பழங்கள் எல்லாமே
உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் சேர்க்கும் |
||||||||
See Fruits | ||||||||
by Dhamotharan.S on 03 Oct 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|