இலங்கைக்கு எதிரான பரபரப்பான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நேற்று நடந்த இந்த போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி 37.5 ஓவரில் 138 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
|