|
||||||||
குறும்பு குரங்குகள் |
||||||||
பார் பார் பார் ஓடி ஆடும் குரங்குகளை பார்.
குட்டி குட்டி குரங்குகள்,
அம்மா வயிற்றில் தொங்குதே.
சுற்றி சுற்றி வருகுதே,
எல்லோரையும் மிரட்டுதே.
அந்த பாப்பா கையிலே,
பழத்தை பிடுங்கி போகுதே.
அந்த அக்காள் கையிலே,
இருக்கும் பைகளை பிடுங்குதே.
அச்சச்சோ ! அந்த கூடையில்,
இருந்த பொருட்களை எடுத்து,
வெளியே வீசுதே. இத்தனை
குறும்புகள் செய்யுதே, அடிக்க
கையை ஓங்கினால், மரத்தில்
ஏறி மிரட்டுதே. விட்டு விட்டு
நடந்தாலும் மீண்டும் நம்மை
தொடருதே. . |
||||||||
Monkeys | ||||||||
by Dhamotharan.S on 08 Oct 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|