|
||||||||
தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது அவர்களின் நூற்கள் நாட்டுடமையாக்கப் பட்டிருக்கிறது |
||||||||
தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது அவர்களின் நூற்கள் நாட்டுடமையாக்கப் பட்டிருக்கிறது.
இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததுதான் தமிழ். இப்பிரிவுகளில் தமிழிசை வேர்களைத் தொல்லாசிரியர்கள் வழியில் மீட்டுக் கொண்டுவருவதைத் தம் தலையாய பணியாகக் கொண்டிருப்பவர் நா.மம்மது. அறக்கட்டளை அமைத்து தமிழிசை ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவர் ‘தமிழிசைப் பேரகராதி’, ‘ஆபிரகாம் பண்டிதர்’, ‘தமிழிசை வரலாறு’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நெடுஞ்சாலைத் துறையில் தமிழக அரசு கண்காணிப்பாளர் பணியிலிருந்து 2004-ல் ஓய்வுபெற்ற பின், தமிழிசை ஆய்வைத் தொடங்கி தொடர்ந்து இயங்கி வருகிறார்.
நா. மம்மது (பிறப்பு: 24 திசம்பர் 1946) தமிழிசை ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். தமிழிசைப் பேரகராதி ஒன்றினை சொற்களஞ்சியம், பண் களஞ்சியம், இசைக்கருவிகள் களஞ்சியம் என மூன்று தொகுதிகளாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் இவர் அவற்றுள் முதல் தொகுதியான தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்) என்ற நூலை "இன்னிசை அறக்கட்டளை" மூலம் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் குரலிசைக் கலைஞரான ராஜா முகமதுவுடன் இணைந்து விளக்கமும், நிகழ்த்தலும் கூடிய தமிழிசை நிகழ்ச்சிகளைப் பல்வேறு அரங்குகளில் நிகழ்த்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள இடைகால் என்ற ஊரினரான நா. மம்மது தற்பொழுது மதுரையில் வசித்துவருகிறார். கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், தத்துவவியலில் முதுகலைப் பட்டமும், இசையில் மெய்ம்மையியல் முதுவர் பட்டமும் பெற்றவர். நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி 2004இல் ஓய்வு பெற்றவர். புகழ்பெற்ற தமிழிசை ஆய்வாளரான வீ. ப. கா. சுந்தரம் இவரது இசை ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார். மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழிசை ஆய்வு மையத்தில் முதன்மை ஆய்வாளராக இருந்துவருகிறார்.
நூல்கள்
1)தமிழிசைப் பேரகராதி, சொற்களஞ்சியம், [இன்னிசை அறக்கட்டளை]
2)ஆபிரகாம் பண்டிதர், [சாகித்திய அகாதெமி]
3)தமிழிசை வேர்கள், [எதிர் வெளியீடு]
தமிழிசைத் தளிர்கள், [தமிழோசை பதிப்பகம்]
4)இழையிழையாய் இசைத் தமிழாய், [தென்திசை]
5)ஆதி இசையின் அதிர்வுகள், [வம்சி புக்ஸ்]
6)தமிழிசை வரலாறு, [நாதன் பதிப்பகம்]
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|