|
||||||||
ஜாலிக்காக குடிப்பது தப்பா? |
||||||||
ஜாலிக்காகக் குடிப்பது தப்பா? உடலுக்கு ஓய்வு அவசியம் அல்லவா?
சத்குரு:
பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
“நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்பவர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
“பந்தயத்திற்கு நான் தயார்,” என்றார்.
அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, “ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
“பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வெறோரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்,” என்றார் அவர்.
இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?
மது அருந்துபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன்.
இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம்தான்; ஆனால், உறக்கம் அவசியமில்லை. நான் ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைக்க திருப்தியுடன், முழு விழிப்புணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது.
உடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால்தான் அதிக திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை.
நீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதே… அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா எந்நேரமும் விழிப்புணர்வுடன், அதே சமயம் முழுமையான இன்பத்துடன் உங்களை வைத்திருக்கும் அமுதத்தை அருந்தலாம்; ஈஷாவுக்கு வாருங்கள்!
ஜாலிக்காகக் குடிப்பது தப்பா? உடலுக்கு ஓய்வு அவசியம் அல்லவா? சத்குரு: பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். “நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்பவர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா?” என்று அறிவித்தார். யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார். “பந்தயத்திற்கு நான் தயார்,” என்றார். அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, “ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார். “பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வெறோரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்,” என்றார் அவர். இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்? மது அருந்துபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம்தான்; ஆனால், உறக்கம் அவசியமில்லை. நான் ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைக்க திருப்தியுடன், முழு விழிப்புணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது. உடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால்தான் அதிக திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை. நீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதே… அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா எந்நேரமும் விழிப்புணர்வுடன், அதே சமயம் முழுமையான இன்பத்துடன் உங்களை வைத்திருக்கும் அமுதத்தை அருந்தலாம்; ஈஷாவுக்கு வாருங்கள்! |
||||||||
by Swathi on 30 Mar 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|