வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று இந்திய, இலங்கை அணிகள் மோதின. முதலில் பாட்டிங் செய்த இந்திய அணி 29 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் எடுத்திருந்தது. பின்னர் மழையால் ஆட்டம் தபைட்டதால் 29 ஓவராக குறைக்கப்பட்டது.டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கைக்கு 26 ஓவரில் 178 ரன் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி விளையாடிய இலங்கை அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.நாளை நடக்கும் இறுதிபோட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
|