ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும்(Ravindra Jadeja), மேற்கிந்திய தீவு வீரர் சுனில் நரைனும், பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். பேட்ஸ்மேன்கலுக்கான பட்டியலில், விராத் கோஹ்லி நான்காவது இடத்திலும், மகேந்திர சிங் தோனி தொடர்ந்து 7வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 16வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் பட்டியலில் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் முறையே 18 மற்றும் 20வது இடங்களைப் பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja), நான்காவது இடத்தில் உள்ளார்.
|