தேவையானவை :
1. வரகு அரிசி - 1 கிலோ
2. நாட்டு வெல்லம் - 3/4 கிலோ
3. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
1. முதலில் வரகு அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, சல்லடையால் சலித்துக்கொள்ளவும்.
2. நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, வரகு அரிசி மாவினை சேர்த்துச் சற்று கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
3. இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான ஆரோக்கியமான வரகு அரிசி அதிரசம் தயார்.
|