தேவையானவை:
1. கம்பு - 500 கிராம்
2. வெல்லம் - 500 கிராம்
3. வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
செய்முறை:
1. கம்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, வடித்து விட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.
2. வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்துக்கொள்ளவும்.
3. வெல்லத்துடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
4. வெல்லப்பாகின் சூடு குறைவதற்கு முன், கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து, எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்.
சுவையான, சத்தான கம்பு உருண்டை தயார்.
|