|
||||||||
ஸ்ரீ ஜெயந்தி |
||||||||
கோகுலாஷ்டமி (08-09-2012):கண்ணன் பிறந்த தினம் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப் படுகிறது.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக்
குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல்
10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன்.
அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் 1-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள்,
காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.வழிபாட்டு முறை:
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும்,
ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம்,
பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம்
போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
கோகுலாஷ்டமி:
கண்ணன் பிறந்த தினம் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப் படுகிறது.ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான்.
மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் 1-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.
வழிபாட்டு முறை:
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். |
||||||||
by Swathi on 10 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|