ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் 2.O-வின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட் செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில், 2.0 படத்தின் நிலவரம் பற்றி இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் 2.0 படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு. ரஜினியும் அக்ஷய் குமாரும் நடித்த கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கியமான இரு பெரிய சண்டைக்காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டோம். 50% படப்பிடிப்பு முடிந்தது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
|