|
||||||||
மாட்டுப் பொங்கல் |
||||||||
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
"பட்டிப் பொங்கல்":
பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை "பட்டிப் பொங்கல்" எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை, கால்நடைகளைபோற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும்.இப் பொங்கல் பொங்குவதனால் "பட்டி" பெருகும் என்பது ஐதீகம்.
உழவுக்கும், வண்டி இழுக்கவும், சூடு மிதிக்கவும், நீர் இறைக்கும் சூத்திரத்தைச் சுற்றுவதற்கும் இன்னும் பல தேவைகளுக்கு எருது மாடுகளும், பால், சாணம், இனப்பெருக்கத்திற்கு பசு மாடுகளும் பல வகையில் உழவனுக்கு உதவி செய்கின்றன. சில சந்தற்பங்களில் பசு மாடுகள்கூட எருது மாட்டின் வேலைகளைச் செய்கின்றன. மாட்டுப் பொங்கல் தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதிக் குறி வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.
ஜல்லிக்கட்டு:
பொங்கல் பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு விஷயம் இருக்கிறது. அதுதான் ‘ஜல்லிக்கட்டு’. இளம் காளையர் நிஜக் காளைகளை அடக்கும் விளையாட்டு இது. இன்றும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். இந்த ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடத்தப்பட்டாலும், அனங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இதேபோல சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், ‘ மஞ்சு விரட்டு’ என்ற பெயரில் ஜல்லிக் கட்டுகள் நடத்தப்படுகின்றன. |
||||||||
by Swathi on 17 Aug 2012 2 Comments | ||||||||
Tags: மாட்டுப் பொங்கல் பொங்கல் பொங்கல் விழா மாட்டு பொங்கல் ஆட்டு பொங்கல் Pongal Pongal Vizha | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|