LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மகாராஷ்டிர மாநில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கோவை சதாசிவத்தின் சில்லுக்கோடு உரையாடல் கதை

கோயம்புத்தூர் மாநகரில் 23 செப்டம்பர் 1961 அன்று வள்ளியம்மாள்-கந்தசாமி இணையரின் தலைமகனாகப் பிறந்தார் சதாசிவம்.  பொருளியப் பின்புலம் அற்ற குடும்பச்சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட சதாசிவம், ஒரு கடைசல் இயந்திரப் பட்டறையில் வேலை பார்த்தார். அதன்பின் மிதிவண்டிக் கடை வைத்திருந்தார். பின்னலாடைத் தொழிலாளியாகவும் இருந்தார். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார்.  மேலும், எழுத்தாளர், கதைசொல்லி, ஆவணப்பட இயக்குநர், மற்றும் பேச்சாளர் ஆவார்.
********************************* 
இவர் எழுதிய பல்வேறு நூல்களில் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை      முன்னிறுத்தியுள்ளார். இவரது எழுத்துவழி கருத்துக்கள் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. விளையாட்டு சம்பந்தமாக இவர் எழுதிய சில்லுக்கோடு என்ற நூலில் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் 21 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கமாக கூறியுள்ளார். 
**********************************
 சில்லுக்கோடு என்ற நூலில்....................
‘சடுகுடு விளையாட்டு’
மூச்சை அடக்கவும் ,
கள்வனைப் பிடிக்கவும்,
எதிரணியிடமிருந்து மீளவும்
கொடுக்கப்பட்ட பயிற்சியின் நீட்சிதான்
சடுகுடு என சடுகுடு விளையாட்டின் வரலாற்றினை குறிப்பிட்டுள்ளார்.
*********************************
விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது.  
************************************************
கண், காது, மூக்கு, வாய் என உடலில் நான்கு புலன்களும் இயங்கும் சடுகுடு விளையாட்டு உடலுக்கு பலத்தையும், உள்ளத்துக்கு உறுதியும் அளிக்கிறது. சடுகுடு விளையாட்டு தமிழகத்தில் தோன்றி ‘கபடி’ விளையாட்டாக பரிணமித்து இன்று 65 நாடுகளில் விளையாடப்படுகிறது.
*****************************
நொண்டி விளையாடிக் கொண்டே செய்யும் உடற்பயிற்சி. ஒரு காலை மடக்கி , ஒரு காலில் தவ்வும் பொழுது கால்களுக்கு இடையே அதிகரிக்கும் இரத்த ஒட்டம் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்பெறச் செய்து மலட்டுத் தன்மையை நீக்குகிறது. சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது. தன்னம்பிக்கையைத் தருகிறது குழந்தைகளிடத்தில் விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது.  
********************************
உட்பட பல்வேறு விளையாட்டுக்களை குறித்தும் தாய் குழந்தைக்கு சேறூட்டுவது       குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த புத்தகத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் இத்தகைய பெருமை தாங்கி வெளிவந்துள்ள சில்லுக்கோடு நூல் மகாராஷ்டிர மாநில அரசின் தமிழ் பிரிவு பாடப்புத்தகத்தில்,  சில்லுக்கோடு உரையாடல் கதை இடம்பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் மாநகரில் 23 செப்டம்பர் 1961 அன்று வள்ளியம்மாள்-கந்தசாமி இணையரின் தலைமகனாகப் பிறந்தார் சதாசிவம்.  பொருளியப் பின்புலம் அற்ற குடும்பச்சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட சதாசிவம், ஒரு கடைசல் இயந்திரப் பட்டறையில் வேலை பார்த்தார். அதன்பின் மிதிவண்டிக் கடை வைத்திருந்தார். பின்னலாடைத் தொழிலாளியாகவும் இருந்தார். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார்.  மேலும், எழுத்தாளர், கதைசொல்லி, ஆவணப்பட இயக்குநர், மற்றும் பேச்சாளர் ஆவார்.

இவர் எழுதிய பல்வேறு நூல்களில் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை      முன்னிறுத்தியுள்ளார். இவரது எழுத்துவழி கருத்துக்கள் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. விளையாட்டு சம்பந்தமாக இவர் எழுதிய சில்லுக்கோடு என்ற நூலில் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் 21 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கமாக கூறியுள்ளார். 

சில்லுக்கோடு என்ற நூலில்....................

‘சடுகுடு விளையாட்டு’மூச்சை அடக்கவும் ,கள்வனைப் பிடிக்கவும்,எதிரணியிடமிருந்து மீளவும்கொடுக்கப்பட்ட பயிற்சியின் நீட்சிதான்சடுகுடு என சடுகுடு விளையாட்டின் வரலாற்றினை குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது

கண், காது, மூக்கு, வாய் என உடலில் நான்கு புலன்களும் இயங்கும் சடுகுடு விளையாட்டு உடலுக்கு பலத்தையும், உள்ளத்துக்கு உறுதியும் அளிக்கிறது. சடுகுடு விளையாட்டு தமிழகத்தில் தோன்றி ‘கபடி’ விளையாட்டாக பரிணமித்து இன்று 65 நாடுகளில் விளையாடப்படுகிறது.

நொண்டி விளையாடிக் கொண்டே செய்யும் உடற்பயிற்சி. ஒரு காலை மடக்கி , ஒரு காலில் தவ்வும் பொழுது கால்களுக்கு இடையே அதிகரிக்கும் இரத்த ஒட்டம் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்பெறச் செய்து மலட்டுத் தன்மையை நீக்குகிறது. சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது. தன்னம்பிக்கையைத் தருகிறது குழந்தைகளிடத்தில் விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது.

உட்பட பல்வேறு விளையாட்டுக்களை குறித்தும் தாய் குழந்தைக்கு சேறூட்டுவது       குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த புத்தகத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் இத்தகைய பெருமை தாங்கி வெளிவந்துள்ள சில்லுக்கோடு நூல் மகாராஷ்டிர மாநில அரசின் தமிழ் பிரிவு பாடப்புத்தகத்தில்,  சில்லுக்கோடு உரையாடல் கதை இடம்பெற்றுள்ளது.

by Kumar   on 10 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.