|
|||||
மிளகாயின் மருத்துவ குணங்கள் ! |
|||||
தமிழ்நாட்டு சமையலில் மிளகாய்க்கு என்றே சிறப்பான இடம் உண்டு. பொதுவாக மிளகாய் உணவின் கார சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
மிளகாயின் வகைகள் :
மிளகாய் அவற்றின் காரத்தன்மையின் காரணமாக மூன்று வகையாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
1.ஊசி மிளகாய், 2.குண்டு மிளகாய், 3.குடமிளகாய்
மருத்துவ பயன்கள் :
1. மிளகாயில் உள்ள கெப்சைசின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு வெப்பத்தினை அளிக்கிறது. இதனால் கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது.
2. மிளகாயை தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.
3. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.
4. பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.
5. சர்க்கரை மற்றும் குல்கந்த் ஆகியவற்றுடன் சேர்த்து தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது.
6. இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.
7. இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் - ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
8. விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது. |
|||||
by Swathi on 10 Jul 2013 3 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|