|
||||||||
ஆரோக்கிய உடல் |
||||||||
உற்றுப்பார் உற்றுப்பார் உடலின் உறுப்புக்களை உற்றுப்பார் ஒவ்வொரு உறுப்பும் முக்கியமே, உடலின் செயல்களும் முக்கியமே
அழகு என்பது மறைவதுவே, ஆரோக்கியம் மட்டும் உன் வாழ்வு
உடலின் உறுப்புக்கள் செயல்களிலே ஒழுங்கு என்பது நடைமுறையே
உறுப்புக்கள் ஆயிரம் இருந்தாலும் ஒழுங்கு என்பது முக்கியமே.
மூளையின் செயல்களின் முக்கியத்தால் எல்லா உறுப்புக்கள் இயங்கிடுமே
இருதயம் நன்கு துடிப்பதினால் உடலுக்கு இரத்தம் பரவிடுமே
உண்ணும் உண்வை ஜீரணிக்க ஜீரண உறுப்புக்கள் செயல்படுமே
இரத்தத்தின் அசுத்தத்தை நீக்கிவிட சிறு நீரகம் உறுப்பு செயல்படுமே
கழிவுகள் உடனே வெளியேற அதற்கென உறுப்புக்கள் தனி உண்டு !
ஆயிரம் நரம்புகள் சென்றாலும் அதனதன் பாதைகள் தனி தனிதான்
எல்லா நரம்புகள் நம் உடலை எலும்புடன் இணைத்து வழி நடத்தும்
இத்தனை செயல்கள் நடைபெறவே தவறுகள் இல்லா பழக்கங்களை
எல்லா நாட்களும் மேற்கொள்வாய் |
||||||||
Human Body | ||||||||
by Dhamotharan.S on 20 Dec 2017 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|