|
||||||||
அம்மா சுட்ட தோசை |
||||||||
அரிசி உளுந்து ஊறவும், அரைத்து வைத்த மாவையே அழகாய் தோசை கல்லிலே சுட்டு தருவாள் அம்மாவாம் வட்ட வட்ட தோசையாய் குண்டு குண்டு உருவமும், கையில் எடுத்து உண்பது பஞ்சு போல இருக்குமே மென்மை தாளின் வடிவிலே பெரிய பெரிய உருவத்தில் முறுகலாக சுட்டுத்தான் தட்டில் எடுத்து வைப்பாளே ருசித்து பார்த்து உண்கையில் மொறு மொறுவென இருக்குமே வெங்காயம் நிறைய போட்டுத்தான் எண்ணை ஊற்றி தாளித்து அரைத்து வைத்த மாவுடன் கல்லில் ஊற்றி சுடுவாளே நாங்கள் ருசித்து பார்த்த்தில் “வெங்காய தோசை” வாயில் மணக்குதே விதம் விதமாய் தோசைகள், அரிசி, கோதுமை, ராகியும், சோளம் கம்பு தானியம் ஊற வெத்து செய்வாளே ! நாங்கள் என்றும் பாடுவோம் அம்மா சுட்ட தோசை ஆளை மயக்கும் தோசை ! |
||||||||
My mummy cooked "Dosai" | ||||||||
by Dhamotharan.S on 10 Aug 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|